+2 வகுப்பு துணைத் தேர்வுகள் முடிவுகள் வெளியானது : முடிவுகளை எவ்வாறு தெரிந்துக் கொள்வது எப்படி?
கடந்த மே மாதம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 12ஆம் வகுப்பு அல்லது பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in/ இல் தெரிந்துக் கொள்ளலாம்.
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் 2023: முடிவுகளை எவ்வாறு தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://dge.tn.gov.in/
படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்
படி 3: ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்
படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவைப் பார்த்து பதிவிறக்கி வைத்துக் கொள்ளவும்
விடைத்தாள் நகல்பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.