+ 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு..!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 25-ந்தேதி மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன. 26-ந்தேதி ஆங்கில பாட தேர்வுகளும், 28-ந்தேதி முதல் இதர பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன. ஜூலை 2-ந்தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணிக்கு முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூன் , ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2025 மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 14.05.2025 ( புதன்கிழமை) முதல் 29.05.2025 (வியாழக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி
முதல் மாலை 5.0௦ மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை
மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
சிறப்பு அனுமதித் திட்டம்
14.05.2025 ( புதன்கிழமை) முதல் 29.05.2025 (வியாழக்கிழமை) வரையிலான நாட்களில் ஜூன், ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05.2025 (வெள்ளிக்கிழமை) மற்றும் 31.05.2025 (சனிக்கிழமை) ஆகிய
நாட்களில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதிக் கட்டணம் . ரூ.1000/- (2024 - 2025ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிப்பெறும் பள்ளி களில் பயின்று தேர்ச்சிப்பெறாத 7, வருகைப்புரியாத மாணவர்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது)
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் மையம் (Government Examinations Service Centres) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின்
(Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை Directorate of Government Examinations என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
#BREAKING பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு#PublicExam #TNSchools #PettiKadaiMedia pic.twitter.com/QHg9VxvDeG
— Petti Kadai Media (@PettiKadaimedia) May 9, 2025