1. Home
  2. தமிழ்நாடு

"அந்த ஒரு தேர்வை எழுதினால் மட்டுமே +2 மாணவர்கள் பாஸ்" : அமைச்சர் அதிரடி

"அந்த ஒரு தேர்வை எழுதினால் மட்டுமே +2 மாணவர்கள் பாஸ்" : அமைச்சர் அதிரடி


கொரோனா வைரஸ் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல, 11ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கொரோனா அச்சத்தால் 32 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.

"அந்த ஒரு தேர்வை எழுதினால் மட்டுமே +2 மாணவர்கள் பாஸ்" : அமைச்சர் அதிரடி

அதனால் அந்த தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 12ஆம் வகுப்பு மாணவர்கள் எஞ்சிய ஒரு தேர்வை எழுதினால் தான் பாஸ் என்றும் அந்த தேர்வை எழுதவில்லை என்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்றும் கூறினார். 

newstm.in

Trending News

Latest News

You May Like