மனிதக் கழிவு பூசிய விவகாரத்தில் சிக்கிய 2 பள்ளி மாணவர்கள்..!!

திருத்தனி மாவட்டம் மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் மற்றும் கதவுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யா, திருத்தணி காவல்துறைக்கு புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையிலான காவலர்கள், மத்தூர் கிராமம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். அதன்மூலம் சம்பவம் நடந்த அதே பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள் தான், இப்படியொரு காரியத்தை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தாங்கள் தவறு செய்ததை 2 மாணவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆசிரியர்கள் மீதான கோபத்தில் இப்படி செய்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின் அவர்களுடைய எதிர்காலம் கருதி, இவ்வழக்கில் இருந்து மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் தங்களுடைய சொந்த ஜாமினில் மாணவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் திருத்தணி மத்தூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.