2 நண்பர்களை மாறி மாறி காதலித்த +2 மாணவி... போட்டா போட்டியால் பலியான 2 உயிர்கள் ..!

விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்துள்ளார். தன்னுடைய நண்பர்களாக இருந்த சாய்குமார், சூரிய பிரகாஷ் (25) ஆகியோருடன் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சாய்குமாரை அந்த மாணவி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் மற்றொரு காதலனான சூரிய பிரகாசுடன் தன்னுடைய காதலை அந்த மாணவி தொடர்ந்து வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சாய்குமாருக்கும் அந்த மாணவிக்கும் திருமணம் நடைபெற்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. ஹோட்டல் அறையில் வைத்து தாலி கட்டும் வீடியோக்களை பார்த்த சூர்யாபிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்து மாணவியிடம் கேட்க, அவரும் உண்மையை ஒப்புக் கொண்டார்.
ஏற்கனவே நண்பர்களாக இருந்த சாய்குமார், சூரிய பிரகாஷ் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தங்களுக்குள் பேசியுள்ளனர். இரண்டு பேரும் அந்த மாணவியின் வீட்டுக்கு நேராக சென்று இரண்டு பேரில் யார் தேவை என்பதை நீயே முடிவு செய்து கொள் என்று கூறிவிட்டு வந்துள்ளனர்.
தன்னுடைய இரட்டை காதல் நாடகமும், திருமண வீடியோவும் வெளியில் தெரிந்து விட்டதால் அவமானமடைந்த மாணவி, சில நாட்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை துவக்கினர்.
సూర్య ప్రకాశ్ అనే యువకుడిని ప్రేమించి సాయి అనే వ్యక్తిని పెళ్లి చేసుకున్న మైనర్ - ఇద్దరు ఒత్తిడి తేవడంతో బలవన్మరణం - ఇద్దరు యువకుల పై ఫిర్యాదు చేసిన మైనర్ తల్లిదండ్రులు - #suicide #heartbreak #Suryaprakash #Police #Sai #Visakha #Gopalapatnam #loved #woman pic.twitter.com/C5nLc1HPNm
— Dial News (@dialnewsinfo) August 13, 2023
போலீசார் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சிய காதலன் சூரிய பிரகாஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாணவிக்கு தாலி கட்டிய சாய் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஒரு மாணவிக்காக இரு ஆண்கள் போட்டி போட்டு இரண்டு பேர் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.