1. Home
  2. தமிழ்நாடு

திடீரென ரயிலை நிறுத்திய ஓட்டுநர் - அதிர்ச்சியில் 2 பயணிகள் உயிரிழப்பு..!

1

ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்த புருஷோத்தமன் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12:5 மணி அளவில் ஜார்கண்ட் மாநிலம் கோமோ மற்றும் கோடெர்மா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது அப்போது பர்சாபத் கிராமம் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை எமர்ஜென்சி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்

இதனை சிறிதும் எதிர்பாராத பயணிகள் சிலர் காயம் அடைந்தனர் இதில் இருவர் மட்டும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு மத்திய ரயில்வேயில் தன்பாத் ரயில்வே கோட்ட மேலாளர் கே.கே சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் சுமார் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்பு தன்பாத் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள கிராண்ட் கார்டு லைனில் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

Trending News

Latest News

You May Like