ஜார்க்கண்ட் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் 2 பேர் பலி, 20 பேர் காயம்..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி சென்ற ஹவுரா - சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (12810) ரயில் இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் திடீரென தடம் புரண்டன. இதில் ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் புரட்டிப் போடப்பட்டன. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து தென்கிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று அதிகாலை 3.45 மணியளவில் விபத்து நடந்துள்ளது. மும்பை - ஹவுரா ரயில் (ரயில் எண் 12810) சக்ரதர்பூர் அருகே தடம்புரண்டது. இதில் மும்பை - ஹவுரா மெயிலின் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 2 பேர் இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
உதவி எண்கள் அறிவிப்பு: ரயில் விபத்தை ஒட்டி ரயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
டாடாநகர்: 06572290324
சக்ரதர்பூர்: 06587 238072
ரூர்கேலா: 06612501072, 06612500244
ஹவுரா: 9433357920, 03326382217
ராஞ்சி: 0651-27-87115
HWH ஹெல்ப் டெஸ்க்: 033-26382217, 9433357920
SHM ஹெல்ப் டெஸ்க்: 6295531471, 7595074427
KGP ஹெல்ப் டெஸ்க்: 03222-293764
CSMT ஹெல்ப்லைன்: 55993
P&T: 022-22694040
மும்பை: 022-22694040
நாக்பூர்: 7757912790
இந்த விபத்து காரணமாக இந்த மார்க்கத்தில் செல்லும் ஹவுரா - இஸ்பாட் எக்ஸ்பிரஸ் ரயில் (22861), காரக்பூர் - தன்பாத் எக்ஸ்பிரஸ், ஹவுரா - பார்பில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சவுத் பிஹார் எக்ஸ்பிரஸ் (13288) மாற்றுப் பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசன்சோல் டாடா மெமும் சிறப்பு ரயில் (08173) ஆத்ரா வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Jharkhand Train Accident | At least 2 killed, 20 injured after 18 coaches of train number 12810, Howrah-Mumbai Mail, derailed at around 3:45 am today near Badabamboo, under the Chakradharpur Division of the South Eastern Railway. #Mumbai #ModiSarkar3 #jharkhandtrainaccident pic.twitter.com/rsfH89R1wu
— Arko Saha (@ArkoSaha_) July 30, 2024
Jharkhand Train Accident | At least 2 killed, 20 injured after 18 coaches of train number 12810, Howrah-Mumbai Mail, derailed at around 3:45 am today near Badabamboo, under the Chakradharpur Division of the South Eastern Railway. #Mumbai #ModiSarkar3 #jharkhandtrainaccident pic.twitter.com/rsfH89R1wu
— Arko Saha (@ArkoSaha_) July 30, 2024
முன்னதாக கடந்த 19-ம் தேதி சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள், உத்தரப் பிரதேசத்தின் ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் துயரம் விலகுவதற்குள் ஜார்க்கண்டில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது.