ஒரே நேரத்தில் 2 தேர்வுகள் – திணறும் பள்ளி மாணவர்கள்!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் காலாண்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்வரின் திறனறிவு தேர்வு செப்.23 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் 1000 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் மாணவர் பட்டப்படிப்பு முடிக்கும் வரைக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 11ம் வகுப்பு வேதியியல் தேர்வுக்கு மறுநாள் திறனறிவு தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்கள் எந்த தேர்வுக்கு தயாராவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.
எனவே, இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கலந்தோசித்து திறனறிவு தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியமைக்க வேண்டும் அல்லது அதற்கான சில மாறுதல்களை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.