1. Home
  2. தமிழ்நாடு

2 டோஸ் தடுப்பூசியால் பாதுகாப்பு இல்லை.. ஓமைக்ரான் அலை வீசும்.. பிரதமர் எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

2 டோஸ் தடுப்பூசியால் பாதுகாப்பு இல்லை.. ஓமைக்ரான் அலை வீசும்.. பிரதமர் எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்


உலக நாடுகள் அணைத்தும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு பரவலால் பெரும் அச்சத்தில் உள்ளது. ஏனெனில் தற்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில், அதிவேகமாக பரவும் தன்மைகொண்ட ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வருவதால் அதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஓமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், விரைவில் ஓமைக்ரான் பேரலை வீசும். அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் 2 டோஸ்களும் ஓமைக்ரான்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது.

ஆனால் 3-வதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் ஓமைக்ரான் பாதிப்பு குறையும் என்று அறிவியல் உலகம் கூறுகின்றது. எனவே மக்கள் அனைவருக்கும் ஒரு மாதகாலத்திற்குள் இன்னொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

2 டோஸ் தடுப்பூசியால் பாதுகாப்பு இல்லை.. ஓமைக்ரான் அலை வீசும்.. பிரதமர் எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

இப்போது அவசர நிலையில் இருக்கிறோம். ஓமைக்ரான்க்கு எதிரான நமது போராட்டம் தொடங்கி விட்டது. இந்த நிலையில் 3வது பூஸ்டர் டோஸ் போட்டால் பாதுகாப்பு கிட்டும் என்று விஞ்ஞானிகள் கூறினாலும், ஓமைக்ரான் தீவிரமானது அல்ல என்று அவர்களால் கூற முடியவில்லை.

ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மத்தியில் ஓமைக்ரான் படுவேகமாகப் பரவும் என்று விஞ்ஞான உலகம் நம்மை எச்சரிக்கிறது. புதிய பூஸ்டர் டோஸ் போடப்பட வேண்டுமெனில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3வது பூஸ்டர் டோஸ் அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கிறது. அதாவது 2வது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அதை எடுத்துக் கொண்டு 3 மாத காலம் ஆகியிருக்க வேண்டும் அவர்களுக்குத்தான் பூஸ்டர் டோஸ்.

2 டோஸ் தடுப்பூசியால் பாதுகாப்பு இல்லை.. ஓமைக்ரான் அலை வீசும்.. பிரதமர் எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

நாடு முழுதும் 42 ராணுவக் குழு அனுப்பப்பட்டு தடுப்பூசி பணியை விரைவில் நிறைவேற்றுவோம் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகையில், 3வது டோஸ் எடுத்துக் கொண்டால் 70 முதல் 75% வரை ஓமைக்ரானிடமிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. பிரிட்டனில் 3,000க்கும் அதிகமானோருக்கு ஓமைக்ரான் வகை தொற்றியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனில் ஓமிக்ரான் கேஸ்கள் 3,000த்தைக் கடந்துள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like