தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு 2 நாள் ஆரஞ்சு அலர்ட்..!
Tue, 12 Apr 2022
| 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக, தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை தினம் வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.