1. Home
  2. தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

+2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 2022 - 2023-ம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக அனைத்து படத்திட்டங்களும் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர்.


+2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

அதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி தேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடக்கிறது. மேலும், பிப்ரவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் பாட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 5 வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 3,169 தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஹால்டிக்கெட்டை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


Trending News

Latest News

You May Like