1. Home
  2. தமிழ்நாடு

"துணிவு" படத்தின் 2 ஆவது பாடல் இன்று வெளியாகிறது..."காசேதான் கடவுளடா"

"துணிவு" படத்தின் 2 ஆவது பாடல் இன்று வெளியாகிறது..."காசேதான் கடவுளடா"

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.



"துணிவு" படத்தின் 2 ஆவது பாடல் இன்று வெளியாகிறது..."காசேதான் கடவுளடா"

சமீபத்தில் 'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் வெளியானது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் துணிவு படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'காசேதான் கடவுளடா' என்ற பாடல் இன்று மதியம் 2 மணியளவில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like