1. Home
  2. தமிழ்நாடு

சோகம்...!தடுப்புச்சுவரில் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு!..

சோகம்...!தடுப்புச்சுவரில் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு!..

தெலுங்கானா மாநிலத்தில் கார் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.


தெலுங்கானாவின் நல்கொண்டாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது கார் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் கார் தழைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் ஓட்டுநர் உட்பட இருவர் இறந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஓட்டுநர் பானி குமார் எனவும் அவரது தாயார் கருணா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


சோகம்...!தடுப்புச்சுவரில் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு!..



குமாரின் மனைவி கிருஷ்ணவேணி, மகன் சாய் சனிஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது 10 வயது மகள் ஜஸ்ரிதாவுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. நக்ரேக்கல் நுழைவாயிலில் உள்ள புறவழிச்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like