1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்க உள்ள ரஜினிகாந்த்!!

ஒரே நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்க உள்ள ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்க உள்ளார்.

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உள்ளனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


ஒரே நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்க உள்ள ரஜினிகாந்த்!!


இது தொடர்பாக லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இப்படங்களின் பூஜை நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு படங்களில் ஒன்றை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும், மற்றொன்றை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like