1. Home
  2. தமிழ்நாடு

2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் கருகி பலி!!

2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் கருகி பலி!!

குடும்ப தகராறில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் - தமிழரசி தம்பதிக்கு ஹாசினி என்ற 8 மாத குழந்தை இருந்தது. குடும்ப பிரச்னை காரணமாக தமிழரசியின் அக்கா தனலட்சுமி தங்கை வீட்டிற்கு தனது 4 குழந்தைகளுடன் வந்திருந்தார்.

இந்நிலையில் தனலட்சுமியின் கணவர் சர்குரு மனைவியை பார்க்க வந்தார். வந்து தனலட்சுமியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத குழந்தை மீது ஊற்றினார்.


2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் கருகி பலி!!

தடுக்கச் சென்ற தனலட்சுமியின் தங்கை தமிழரசி மற்றும் அவரது 8 மாத பெண் குழந்தை ஹாசினி மீதும் ஊற்றி எரித்துள்ளார்.பின்னர் சர்குருவும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதில் 2 பச்சிளம் பெண் குழந்தைகள் மற்றும் தமிழரசி, சர்குரு ஆகிய 4 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தனலட்சுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like