புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் - ரிசர்வ் வங்கி..!!
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.