1. Home
  2. தமிழ்நாடு

குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போ தெரியுமா ?

குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போ தெரியுமா ?

தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில், 5,446 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூனில் முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிசம்பரில் பிரதான தேர்வு நடந்தது. வரும் செப்டம்பரில் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வெளியான டி.எஸ்.பி.எஸ்.சி., தேர்வு முடிவு உத்தேச பட்டியலில், குரூப்- 2 தேர்வு முடிவு வெளியீடு, டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடந்து, ஓராண்டு கழித்து முடிவு வெளியிடப்படுவதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குரூப் - 1 முதல்நிலை தகுதி தேர்வு, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவி, வனத்துறை தொழில் பழகுனர், ஜெயிலர், புள்ளியியல் பதவி தேர்வு, மீன்வளம், சுகாதாரத்துறை பதவிகளுக்கான தேர்வு முடிவுகள், இந்த மாதம் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like