1. Home
  2. தமிழ்நாடு

இனி கோவையில் இருந்து 2 மணி நேரத்தில் சேலம் சென்றடையலாம்..!!


இந்தியாவின் அதிவேக ரயில் சேவையாகவும், உலகத்தரத்துடன் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட ரயிலாகவும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இருந்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே 9 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன.

இதையடுத்து வந்தே பாரத் ரயில்ன் 10வது சேவை சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ளது. இதனை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார்.ஏற்கனவே தமிழ்நாட்டிலிருந்து சென்னை செண்டிரல் - மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையாக சென்னை - கோவை இடையே ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் காலை 6 மணிக்கு கோவையிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படும். சரியாக 6.30 மணிக்குத் திருப்பூர் வந்து அங்கிருந்து 6.40க்கு புறப்பட்டு 7.17க்கு ஈரோடு செல்லும் அங்கிருந்து 7.20க்கு கிளம்பி 8.08க்கு சேலம் செல்லும், பின்னர் அங்கிருந்து 8.10க்கு கிளம்பி 12.10க்கு சென்னையைச் சென்றடையும்.

இதே ரயில் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதியம் 2.20 மணிக்குக் கிளம்பி சேலத்திற்கு 6.03க்கு வருகிறது. அங்கிருந்து 6.05க்கு கிளம்பி ஈரோட்டிற்கு 7.02க்கு வருகிறது. ஈரோட்டில் 7.05க்கு கிளம்பி திருப்பூருக்கு 7.43க்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து 7.45க்கு கிளம்பிச் சரியாக 8.30 மணிக்கு கோவையைச் சென்றடைகிறது.


இனி கோவையில் இருந்து 2 மணி நேரத்தில் சேலம் சென்றடையலாம்..!!

இந்த ரயில் கோவை- சென்னை இடையே இயங்கும் இரண்டாவது பகல் நேர ரயிலாகும். ஏற்கனவே கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் காலை 6.15க்கு கிளம்பி சென்னைக்கு மதியம் 1.50க்கு வருகிறது. மீண்டும் சென்னையில் மதியம் 2.30 க்கு கிளம்பி கோவைக்கு இரவு 10.15க்கு சென்றடைகிறது.

இதே போல மறுமார்க்கமாக பகல் நேரத்தில் சென்னை- கோவை இடையே சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் காலை 7.10 மணிக்கு சென்னையில் கிளம்பி மதியம் 2.15 மணிக்குக் கோவையை வந்தடைகிறது. மீண்டும் கோவையிலிருந்து 3.05க்கு கிளம்பி இரவு 10.05க்கு சென்னையைச் சென்றடைகிறது.

Trending News

Latest News

You May Like