1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய கடற்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

22.03.2023 மற்றும் 23.03.2023 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like