1. Home
  2. தமிழ்நாடு

2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.. பிரதமர் அதிரடி திட்டம்..?

2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.. பிரதமர் அதிரடி திட்டம்..?

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே, பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க வேண்டுமானால் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.


விரைவில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 5 பில்லியன் பவுண்ட் சேமிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், அரசுக்கான செலவுகளை குறைக்கும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டிலும் பண வீக்கம் அதிகரித்தால் மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ்சின் இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like