2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..!!

2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..!!
X

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் உட்பட 7 இடங்களில் ஐடி சோதனை நடைபெற்றுவருகிறது.

பனப்பட்டி கிராமத்தில் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நீடித்து வருகிறது. இதேபோல் கோவையில் தொழிலதிபர் அரவிந்த் வீடு உள்பட 7 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்றுவருகிறது. அரவிந்த்க்கு சொந்தமான மறுவாழ்வு மைய அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் கோழி பண்ணை உள்பட அரவிந்த்க்கு சொந்தமான 4 இடங்களில் தொடரும் ரெய்டு தொடர்கிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடைபெற்ற சோதனை நேற்றிரவுடன் முடிவடைந்தது. சோதனை முடிவில் லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
Share it