1. Home
  2. தமிழ்நாடு

2 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!!

2 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், சாலைகளில் வாகனம் செல்லும் போது கானல் நீர் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


2 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிப்பதால், அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஆகையால், பொதுமக்கள் வெப்பம் அதிகம் உள்ள நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குறிப்பான வயதானவர்கள் கத்திரி வெயிலை தவிர்ப்பது நல்லது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like