1. Home
  2. சினிமா

+2 தேர்வில் தேர்ச்சி பெற்று மேலே படிக்க முடியாத மாணவர்களுக்கு நடிகர் விஷால் சொன்ன குட் நியூஸ்..!!

+2 தேர்வில் தேர்ச்சி பெற்று மேலே படிக்க முடியாத மாணவர்களுக்கு நடிகர் விஷால் சொன்ன குட் நியூஸ்..!!

பிரபல நடிகர் விஷால் ஒரு சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் அறக்கட்டளை மூலமாக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது +2 மாரவர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும் தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான ஹரி கிருஷ்ணன் வெளியிட்ட பதிவில், மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம். வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிக்கவைத்து வருகிறார். அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.

நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது ‘தேவி அறக்கட்டளை’ மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள். அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என V ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



Trending News

Latest News

You May Like