1. Home
  2. தமிழ்நாடு

2 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!!

2 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!!

பைக் டாக்ஸிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் கார், ஆட்டோ போல் இரு சக்கர வாகனங்கள் கொண்டு பைக் டாக்சி சேவையும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆப் மூலம் தனியார் நிறுவனங்கள் இந்த சேவைகளை வழங்குகின்றன.

இந்நிலையில் பைக் டாக்சி சேவைக்கு பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பைக் டாக்சி சேவைகளால் தங்கள் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.


2 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!!


இந்நிலையில், பைக் டாக்சி சேவைகளுக்கு எதிர்ப்பு பெங்களூருவில் ஆட்டோ சங்கத்தினர் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சுமார் 21 ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. பெங்களூரு நகர ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீடு வரை ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர்.


2 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!!


கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ரேப்பிடோ ஓட்டும் இளைஞரை பிடித்து அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் வெள்ளை நம்பர் பிளேட் வைத்துக்கொண்டு டாக்சி சேவை தருகிறார் என கூறி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அரங்கேறிய சில நாள்களிலேயே பெங்களூரு முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like