நடனமாடிய 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!! VIDEO
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சித்தையா என்பவரின் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது உறவினரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முத்யம் என்பவர் கலந்துகொண்டார்.
திருமண வீட்டார் சார்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தெலுங்கு பாடல்களுக்கு முத்யம் உற்சாகமாக நடனமாடினார். அப்போது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து இளைஞரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 19 வயதே ஆன இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மரணமடைந்ததிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுபோன்ற உயிரிழப்புகள் சமீப காலமாக அதிக அளவில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
newstm.in