1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலையில் 26 நாளில் 19 லட்சம் பேர் தரிசனம்..!

1

சபரிமலையில் கடந்த 2 வாரங்களாக தினமும் சராசரியாக 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  கடந்த 8-ம் தேதி மட்டும் சற்று குறைவாக 65 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். கடந்த 5-ம் தேதி 80,600 பேரும், 6-ம் தேதி 87,736 பேரும், 7-ம் தேதி 79,296 பேரும், நேற்று முன்தினம் சற்று அதிகமாக 87,390 பேரும் தரிசனம் செய்தனர். 

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே உடனடி முன்பதிவு செய்ய முடியும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்திருந்தது.

ஆனால் தினமும் இதைவிட அதிக எண்ணிக்கையில் இதில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. 

நடைதிறந்த 44 மணி நேரத்திற்குள் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர். போலீசார் மிகவும் விரைந்து செயல்படுவதால் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 4 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் 18ம் படி ஏறி வருகின்றனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும், அப்பம், அரவணை பிரசாதம் வாங்குவதற்கும் நேற்று நீண்ட வரிசை காணப்பட்டது. 

Trending News

Latest News

You May Like