19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.25 குறைப்பு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூன்,01) வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.25 குறைந்துள்ளது. அதன்படி, ரூ.1906க்கு விற்கப்பட்டு வந்த காஸ் சிலிண்டர், ரூ.1,881க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதம், வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.