1. Home
  2. தமிழ்நாடு

ஹஜ் பயணிகள் 19 பேர் உயிரிழப்பு!

1

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஹஜ் ஆனது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பக்ரீத் பெருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவிற்கு ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். வழக்கம் போல இந்த ஆண்டும் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய புனித யாத்திரைக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 20 லட்சம் பயணிகள் மெக்காவில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சௌதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் மேற்கொண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 14 பேர் ஜோர்டனைச் சேர்ந்தவர்கள் எனவும்,  5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  புனிதப் பயணம் சென்றுள்ள சுமார் 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like