மதம் மாறி காதல்… 18 வயது டியூஷன் ஆசிரியர் கொடூரமாக அடித்துக் கொலை!

வேறு சமூக பெண்ணை காதலித்ததால் 18 வயது டியூசன் ஆசிரியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியை சேர்ந்த ராகுல் ராஜ்புத் என்ற டியூஷன் ஆசிரியரும் சிறுமி ஒருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு,அந்த சிறுமி ராகுலுக்கு போன் செய்திருந்தார்.அப்போது பேசிய ராகுலின் அம்மா மீண்டும் இதுபோல் போன் செய்யக்கூடாது என அச்சிறுமியை எச்சரித்தார்.
இருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் படித்துக்கொண்டிருந்த போது காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இருவரின் காதலுக்கு எதிராக இரண்டு குடும்பத்தினரும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ராகுலை பெண்ணின் உறவினர்கள் கம்பு மற்றும் கம்பிகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராகுல் ராஜ்புத் மருத்துவமனை சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர் முகமது ராஜ், அவரது உறவினர் மன்வர் உசேன் மற்றும் மூன்று மைனர் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
newstm.in