1. Home
  2. தமிழ்நாடு

18 OTT தளங்கள் அதிரடியாக முடக்கம்..!

Q

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு (Ministry of Information & Broadcasting) அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னும் ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கத்தை வெளியிட்டு வந்த 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள பக்கங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவை மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த OTT தளங்கள் தொடர்புடைய 19 இணையதளங்கள் 10 மொபைல் செயலிகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய 57 சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றையும் மத்திய அரசு முடக்கி உள்ளது. மத்திய அரசு பலமுறை எச்சரிக்கை வழங்கியும் எச்சரிக்கைகளுக்கு உடன்படாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், Dreams Films,Voovi, Yessma,Uncut Adda, Tri Flicks, X Prime,Neon X VIP,Besharams, Hunters,Rabbit, Xtramood,Nuefliks, MoodX உள்ளிட்ட 18 OTT தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளடக்கத்தின் கணிசமான பகுதி ஆபாசமாகவும், மோசமானதாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது எனவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான உறவுகள், விபச்சார குடும்ப உறவுகள் போன்ற பல்வேறு பொருத்தமற்ற சூழல்களில் நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்களை இந்த தளங்கள் சித்தரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாலியல் மறைமுகங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், சமூகப் பொருத்தம் இல்லாத ஆபாச மற்றும் வெளிப்படையான பாலியல் காட்சிகள் இந்த தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட OTT செயலிகளில் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டிருந்தது என்றும் மற்ற இரண்டு செயலிகள் Google Play Store இல் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like