1. Home
  2. தமிழ்நாடு

18 OTT தளங்கள் மற்றும் 19 இணையதளங்கள் அதிரடியாக முடக்கம்..!

1

பெண்களின் மீதான வன்கொடுமைகளும், கேலிக்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. இத்தகைய செயல்களில் பெரும்பாலும் இளைஞர்களே ஈடுபடுகிறார்கள். இளைஞர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களும், அதன் வாயிலாக அவர்கள் காணும் ஆபாச காட்சிகளும் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனவே இக்காட்சிகளை ஒளிபரப்பும் OTT தளங்கள், இணையதளங்கள் மீது மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீதான நடவடிக்கையாக அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மார்ச் 12ம் தேதி இனி இணையதளத்தில் ஆபாச காட்சிகளை, வெப் சீரியல்களை வெளியிடும் OTT தளங்கள் மற்றும் இணையதளங்கள் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை மீறி இக்காட்சிகளை ஒளிபரப்பு செய்த 18 OTT தளங்கள், 19 இணைய தளங்கள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தால் முடக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பெண்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆபாச காட்சிகளுக்கு எதிரான பிரிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில OTT தளங்களில் 1 கோடிக்கும் அதிகமான நபர்கள் ரசிகர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

Trending News

Latest News

You May Like