#BIG NEWS : நக்சலைட்டுகள் 18 பேர் சுட்டுக்கொலை..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் - தந்தேவாடா எல்லையில், வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் நக்சலைட்டுகள் 18 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். இது குறித்து பிஜாப்பூர் எஸ்.பி., ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்தவர்கள். அதுமட்டுமின்றி பிஜாப்பூர் மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.