சானிடைசர்களுக்கு 18% ஜி எஸ் டி !! அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆல்கஹால் கலந்த சானிடைசர் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இது அத்தியாவசியப் பொருளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவைச் சேர்ந்த ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்னும் நிறுவனம் ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் தயாரித்து வருகிறது. இதற்கு தற்போது 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு அமைப்பான மேம்படுத்தப்பட்ட அரசு ஆணையத்துக்கு ஸ்ப்ரிங்ஃபீல்ட் நிறுவனம் ஒரு விளக்கம் கோரியது.
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கு 12% ஜி.எஸ்.டி விதிக்கப்படுவதால் இதையும் அந்த விகிதத்தில் இணைக்க முடியுமா எனக் கேட்டது. இதற்குப் பதில் அளித்த ஆணையம் இந்த குறிப்பிட்ட வகைப் பொருட்கள் 18% ஜிஎஸ்டியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாகப் பதில் அளித்துள்ளது.
அத்துடன் இந்த சானிடைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வருவதையும் உறுதி செய்துள்ளது. அத்தியாவசிய பொருள் எனப் பட்டியலிட்ட பிறகும் இந்த கொள்ளை நோய் பரவும் நேரத்தில் அரசு அதிக வரி விதிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
Newstm.in