மக்களே எச்சரிக்கை..!! வரும் மே 18 வரை வெயில் சுட்டு எரிக்க போகுது..!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம், வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சித்திரை முடிவடையுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறைந்தபாடில்லை.
இத்தகைய நிலையில், எதிர்வரும் 5 தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரையில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, சென்னையில் வெப்பம் 40 டிகிரி வரையில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.26 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வெப்பம் சுட்டெரித்ததால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மீனம்பாக்கத்தில் 105.08 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இந்தாண்டில் முதல்முறையாக சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதே போல் வேலூர், மதுரை ஆகிய இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
.png)