20 பேருக்கு HIV பரப்பிய 17 வயது பெண்..!
உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும்.
இந்நிலையில் உத்தராகண்ட் நைனிடாலில் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி மூலம் 20 இளைஞர்களுக்கு HIV தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குலார்கட்டி பகுதியை சேர்ந்த இந்த சிறுமி, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இப்படியாக சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
அந்த வகையில் 20 பேருக்கு எயிட்ஸ் நோய்க்கு காரணமான HIV தொற்று பரவியுள்ளது. இதுபற்றி மேலும் விசாரணை நடந்துவருகிறது.
19 பேருக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த கொடுமையை செய்தாக சொல்லப்படுகிறது. இந்த இளைஞர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. காய்ச்சல், தீராத உடல் சோர்வு என மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது ரத்த மாதிரியை பரிசோதித்தபோதுதான், இவர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.