1. Home
  2. தமிழ்நாடு

17 வயது பாலிடெக்னிக் மாணவனுக்கு எமனாக மாறிய நாய்..!

1

பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் உதய் குமார் (வயது 20) .இவர் தனது  நண்பரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட  ஐதராபாத் மாவட்டம், சந்தா நகரில்  உள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றார்.
அங்கு, மூன்றாவது மாடிக்கு வந்த நாய் ஒன்றை பார்த்த உதய்குமார், விரட்டினார். அப்போது, ​​ஓட்டல் தரையில் வழுக்கியதில் எதிர்பாராதவிதமாக நாயை விரட்டிய நபர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னலின் வழியாக கீழே விழுந்து உயிரிழந்தார். வளாகத்தில் உள்ள ஜன்னல்களில் ஒன்று காற்றோட்டத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருந்துள்ளது, அங்கு தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது   

வேகமாக வந்தவர் ஜன்னலைப் பிடிக்க முடியாமல் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த நண்பரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்,

அங்கு அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்கள் மாடியில் இருந்து கீழே விழும் காட்சிகள் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like