1. Home
  2. தமிழ்நாடு

வரும் 10-ம் தேதிக்குள் 1.77 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: அமைச்சர் ஆர்.காந்தி!

1

திருப்பதி காந்தி ரோட்​டில் புதுப்​பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையத்தை நேற்று தமிழ்​நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்​துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தமிழகத்​தில் மட்டுமல்​லாது நமது அண்டை மாநிலங்​களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்​ளது. தமிழகத்​தில் மொத்தம் 150 விற்பனை நிலையங்கள் உள்ளன. இது தவிர ஆந்திரா​வில் 8 மற்றும் தெலங்​கானா​வில் 3 விற்பனை நிலையங்களும் உள்ளன. இவை காலத்​திற்கு ஏற்ப புதுப்​பிக்​கப்​பட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வரும்​போது, கோ-ஆப்​டெக்ஸ் மிகவும் நஷ்டத்​தில் இயங்கி வந்தது. இதனை லாபகரமாக கொண்டு செல்லவே தற்போது புதுப்​பிக்​கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலத்​திற்கு ஏற்ப தற்கால இளைஞர்களை கவரும் விதத்​தில் டிசைன்கள் செய்து விற்பனை செய்​யப்​படு​கின்றன.

பொங்கல் பண்டிகைக்காக 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 22 லட்சம் வேட்டிகளும் தயாரித்து விநி​யோகம் செய்​யும் பணிகள் மும்​மரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 51 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. வரும் ஜனவரி 10-ம் தேதிக்​குள் தமிழகத்​தில் அனைவருக்​கும் இலவச சேலைகள் மற்றும் வேட்​டிகள் விநி​யோகம் செய்​யப்​படும். யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை என குறை கூறாத வகையில் அவை ரேஷன் கடைகள் மூலம் விநி​யோகம் செய்​யப்​படும்.

நான் 31 ஆண்டு​களாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி திரு​மலைக்கு வந்து விடு​வேன். ஜனவரி மாதம் 1-ம் தேதி திருப்பதி ஏழுமலை​யானை தரிசிப்பதை வழக்​கமாக கொண்​டுள்​ளேன். இவ்வாறு தமிழ்​நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்​துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

Trending News

Latest News

You May Like