சற்றுமுன் நடந்த கோர விபத்து : ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 17 பேர் பலி..!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் ஷாஹ்பூரில் சம்ருத்தி விரைவுச் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மும்பை-நாக்பூரை இணைக்கும் விரைவுச் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலையானது, நாக்பூர், வாசிம், அகமதாபாத், அவுரங்கபாத்,ஜல்னா, நாசிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது. இதற்காக அந்த பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகவுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா தானேவில் கிரேன் விழுந்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.