1. Home
  2. தமிழ்நாடு

ரயில் மோதி 17 பசு மாடுகள் பலியான பரிதாபம்!

Q

கேரளா மாநிலம் பாலக்காட்டில் சென்னை-பாலக்காடு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் தண்டவாளத்தை கடக்க பசு மாடுகள் கூட்டம் முயற்சி செய்துள்ளது. இதில் வேகமாக வந்த ரயில் மோதி 17 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

இறந்தவற்றில் ஒன்று கன்றுக்குட்டி. ரயிலில் அடிபட்ட சில மாடுகள் தண்டவாளத்தில் உடல் நசுங்கிக் கிடந்தன. அருகிலுள்ள பள்ளத்தில் சில பசுக்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பசுக்களின் உடல்களை அகற்றி ரயில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இறந்த மாடுகளை அடக்கம் செய்வது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தன் மாடுகள் உயிரிழந்ததை கண்டு, அவற்றின் உரிமையாளர்களில் ஒருவர் மயக்கம் அடைந்தார். அந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் மக்கள் சிலர் தங்களின் பசுக்களை, மேய்ச்சலுக்காக ரயில் தண்டவாளம் அருகே விட்டுச்சென்றதும், அவை அனைத்தும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

Trending News

Latest News

You May Like