1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் மக்களுக்கு இடையூறாகவும் பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு..!

1

கோவை மாநகர காவல் துறையினர் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பவர்கள் எங்கு வெடிக்கவேண்டும், எங்கு வெடிக்க கூடாது என்பதையும், அவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னரே தெளிவாக விளக்கிக்கூறியிருந்தனர். அப்படி இருந்தும் அதை பின்பற்றாத வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசு வெடித்தவர்கள் 17 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் கோவை மாவட்டத்தில் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட அளவில் 11 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ராக்கெட் வெடிகள் காரணம் என தெரியவந்துள்ளது. நல்ல வேலையாக இந்த விபத்துகளால் யாருக்கும் காயம் ஏற்படவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டதாக 6 பேர் (5 ஆண், 1 பெண்) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலமுடன் உள்ளார் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like