இன்று 17 இடங்களில் சதமடித்த வெயில்!!
தமிழ்நாடு முழுவதும் இன்று 17 இடங்களில் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதற்கேற்ப மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது.
இதனிடையே, மோக்கா புயல் காரணமாக ஈரப்பதம் முற்றிலும் உரிஞ்சப்பட்டதால், தற்போது கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது.
இதனால், வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் இன்று மட்டும் 17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
மீனம்பாக்கம் - 105.44, நுங்கம்பாக்கம் - 105.44, வேலூர் - 108.14, திருத்தணி - 105.8, கரூர் பரமத்தி - 104.9, பரங்கிப்பேட்டை - 104.36, ஈரோடு - 103.64, மதுரை விமான நிலையம் - 103.28, மதுரை நகரம் - 102.2 ஆகிய இடங்களில் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது.
அதே போல், திருச்சி - 103.1, கடலூர் - 102.92, புதுச்சேரி - 102.92, தஞ்சை - 102.2, பாளையங்கோட்டை - 102.02, நாமக்கல் - 100.4, சேலம் - 100.4, நாகப்பட்டனம் - 100.04 என 17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
newstm.in
.png)