காதலிக்க மறுத்த 13 வயது சிறுமியை கொலை செய்த 16 வயது சிறுவன்!

காதலிக்க மறுப்பு தெரிவித்த 13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சோழப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (16) என்ற சிறுவன் சென்னையில் படித்து வந்தான். அவரால் வாய் பேச முடியாது. கொரோனா விடுமுறை காரணமாக அவர் ஊருக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (13) என்ற சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளார் சீனிவாசன்.
நட்பு காதலாக மாற அதைச் சிறுமியிடம் சொல்லியுள்ளார் அவர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தனது பெற்றோரிடம் சொல்லி சீனிவாசனை கண்டித்தும் உள்ளார்.
இந்நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் சென்ற சிறுவன் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. சிறுமி கூச்சலிடவே, கையில் வைத்திருந்த கத்தரிக்கோலால் பிரியதர்ஷினி கழுத்தில் குத்தி விட்டு சிறுவன் தப்பிச் சென்றார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊரின் ஒதுக்குப்புறத்தில் பதுங்கியிருந்த சீனிவாசனையும் கைது செய்தனர்.
newstm.in