1. Home
  2. தமிழ்நாடு

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… குற்றவாளியின் தாய் உடந்தை!!

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… குற்றவாளியின் தாய் உடந்தை!!

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியின் தாயும் அதற்கு உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் ஹரிதேவ்பூர் பகுதியைச் சேர்ந்த குணால் கோத்தாரி என்பவரின் தாய் அனுஸ்ரீ, அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவரது பார்லரில் 16 வயது சிறுமி ஒருவர் அழகு கலை பயிற்சி பெற்று வந்துள்ளார்.

அந்த சிறுமி மீது ஆசைப்பட்ட குணால், அதுகுறித்து தனது தாய் அனுஸ்ரீயிடமும் கூறியுள்ளார். இது குறித்து அறிந்ததும் மகனின் தவறான எண்ணத்தை கண்டிக்காமல் தாயும் அதற்கு உடந்தையாக இருக்க சம்மதித்துள்ளார்.

இந்நிலையில், அந்த சிறுமியை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அனுஸ்ரீ அழைத்துள்ளார். அதன்படி வீட்டுக்குவந்த அந்த சிறுமியிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தாய் குடிக்க கொடுத்துள்ளார்.


16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… குற்றவாளியின் தாய் உடந்தை!!

அப்போது அனுஸ்ரீயின் மகன் குணால் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு சுயநினைவு வந்தபோது தனக்கு நடந்த கொடுமை அவருக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அனுஸ்ரீ மற்றும் அவரது மகன் குணாலை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like