வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமி.. போலீசாரிடம் சிக்கிய கும்பல் !

கரூர் வேலாயுதம் பாளையத்தில் சுப்பிரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
அச்சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றும் ஸ்டார்வின் (22) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனால் இருவரும் செல்போனில் பேசியும், தனியாக சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.
சிறுமியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தததை அடுத்து அவர்கள் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஸ்டார்வினை சந்தித்துள்ளார்.
அப்போது, ஸ்டார்வின் சிறுமியை ஜான் என்ற தனது நண்பர் மூலம், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. ஆனால் ஜான் குடும்பத்தினர் இச்செயலை கண்டித்து வீட்டில் சேர்க்காமல் திருப்பி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அச்சிறுமி சிவகங்கை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு ஸ்டார்வினுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ஸ்டார்வின் இது குறித்து தனது அண்ணன் ராஜ்குமாருக்கு கூறினார்.
ராஜ்குமார் மற்றும் சக நண்பர்கள் சிறுமியை அழைத்து செல்ல நேற்றிரவு சிவகங்கை பேருந்து நிலையம் வந்துள்ளனர். அவர்கள் சிறுமியை சந்தித்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச்செல்ல காத்திருந்தனர்.
அ
ப்போது, அங்கு ரோந்து பணியில் வந்த போலீஸார் சிறுமியுடன் இருந்த நபர்களை பார்த்து சந்தேகமடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குபின் முரணமாக பதில் அளித்தனர்.
இதனால் அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது. பின்னர் மீட்கப்பட்ட சிறுமி மற்றும் 5 இளைஞர்கள் கரூர் வேலாயுதம்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டது.
newstm.in