தமிழகத்தில் மேலும் 16 தொழில் நிறுவனங்கள் முதலீடு !! 6 ,555 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக , உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு , படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடாந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடாந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிரிய வழிகாட்டுதல்களின்படி , தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மேலும், புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயாநிலைக் குழு அமைத்தது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள் , அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான உயர்நிலைக் குழு என பல வழிமுறைகள் ஏற்கனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே என்ற நிறுவனம், கோவிட் – 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மே 27ம் தேதியன்று , தொழில்துறை சார்பில், ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஐப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதாலாந்து ஆகிய நாடுகளைச் சோந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் 20.7.2020 அன்று 8 தொழில் நிறுவனங்களுடன் 10,399 கோடி ரூபாய முதலீட்டில், சுமார் 13,507 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணாவு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இன்றைய தினம் 16 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.
இத்திட்டங்கள் மூலம், 5,137 கோடி ரூபாய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 16 திட்டங்களில், 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணாவு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி Aiur Www.investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தினை துவக்கி வைத்தார்கள். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலும் பூர்த்தி செய்திடும் வகையில், துறைசார் கவனம், மண்டல தொலைதொடர் திட்டம், ஏற்றுமதி மேம்பாடு போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கி , இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
Newstm.in