1. Home
  2. தமிழ்நாடு

உல்லாசத்திற்கு இடையூறு.. 16 வயது மகள் கொலை: தாய், கள்ளக்காதலன் கைது..!

உல்லாசத்திற்கு இடையூறு.. 16 வயது மகள் கொலை: தாய், கள்ளக்காதலன் கைது..!

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 16 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய தாய் மற்றும் அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் சுசில் வர்மா. இவருடைய மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா. இந்த தம்பதியின் மகள் குஷ்பூ வர்மா (16). குடும்ப பிரச்சனை காரணமாக இந்தத் தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.


கணவரை பிரிந்த ஸ்மிரிதி ராணிக்கு அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஆனால், ராணியின் மகள் குஷ்பூவுக்கு தாயின் செயல் பிடிக்கவில்லை. இதனார் அவர் தன் தாயுடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொத்வாலி பகுதியில் மொகல்லா காலா சாஹீத் என்ற இடத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்த நிலையில் குஷ்பூவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன், மகள் மரணம் குறித்து சுசில் வர்மா தனது மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் அனில் குமார் மீது புகார் அளித்துள்ளார்.

முதலில், குஷ்பூ தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையின்போது ராணி கூறியுள்ளார். எனினும், இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குஷ்பூவை படுகொலை செய்தது தெரிய வந்தது. இதன்பின் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மொராதாபாத் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending News

Latest News

You May Like