1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 16 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்..!!


தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உதகரவிட்டுள்ளது. சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் கடலூர் கலெக்டராக நியமனம், அரியலூர் கலெக்டராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம், கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேகப் தஞ்சை கலெக்டராக நியமனம், புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யா நியமனம், நாமக்கல் கலெக்டராக உமா நியமனம், காஞ்சி கலெக்டராக கலைச்செல்வி மோகன் நியமனம், செங்கல்பட்டு கலெக்டராக கமல் கிஷோர் நியமனம், மதுரை கலெக்டராக சங்கீதா நியமனம், சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித் நியமனம், ராமநாதபுரம் , கலெக்டராக விஷ்னு சந்திரன் நியமனம், தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத் நியமனம், திருப்பூர் கலெக்டராக கிருஸ்துராஜ் நியமனம், ஈரோடு கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமனம், திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி நியமனம், நாகை கலெக்டராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம், கிருஷ்ணகிரி கலெக்டராக சராயு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like