1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி..!

Q

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின், ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.

சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே, ஏராளமான பக்தர்கள் மலை ஏறினர். பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், மற்றும் கிரி மலையிலுள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, சுவாமியை தரிசித்தனர்.

நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்கு வரத்து கழகம் சார்பில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த மலை ஏறுவது சிரமம் என்பதால் முதியவர்கள், உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந் நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது சிறுவன் மயங்கி விழுந்த பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான சிறுவனின் பெயர் விஷ்வா. 15 வயதான இவர் பள்ளி மாணவர்.

தமது தந்தை முருகனுடன் அவர் வெள்ளியங்கிரி மலை சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த போது, 3வது மலையில் மயங்கி கீழே விழுந்து பலியானார்.

இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like