விளையாட்டாக தண்டவாளத்தில் கற்களை வைத்தேன் - 15 வயது சிறுவன் கைது..!
திருவொற்றியூர் - விம்கோ நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனிற்கு மாற்றும் இடத்தில் சிலர் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆய்விலிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும், ரயில் செல்லும் வழித்தடத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனரை வைத்துச் சென்றது யார்? ரயிலைக் கவிழ்க்க யாரேனும் சதித்திட்டம் தீட்டி தண்டவாளத்தில் கற்களையும், இரும்பு ஸ்பேனரையும் வைத்துச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தோடு யாராவது இதைச் செய்துள்ளார்களா? என்ற அனைத்து கோணத்திலும் டி.எஸ்.பி கர்ணன், ஆய்வாளர் சசிகலா, லைன் மேன் ஆகியோர் அடங்கிய ரயில்வே போலீசார் குழு விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளது தெரியவந்துள்ளது . பின்னர் இந்த விவகாரத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விளையாட்டாக தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக சிறுவன் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய மாஜிஸ்ட்ரேட் பெற்றோரிடம் ஒப்படைத்தது. மேலும் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் பெற்றோரிடம் அறிவுரை வழங்கப்பட்டது.
.png)