அதிர்ச்சி! 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி!!
![அதிர்ச்சி! 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/b0ca2e5441c46cd34239b0cd09f800c9.webp?width=836&height=470&resizemode=4)
150 அடி ஆழ பள்ளத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
உணவு பொருட்களை ஏற்றி கொண்டு கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வாழைகிரி அருகே வளைவில் திரும்பும் கட்டுப்பாட்டை இழந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது மோதி 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்த போல எழுந்த பலத்தை சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.
![அதிர்ச்சி! 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/a835b806cc1ba3773595457f0e7218c0.webp)
இதனையடுத்து அந்த மலைச்சாலை வழியாக பயணித்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 150 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியில் காயத்துடன் சிக்கி தவித்த ஓட்டுநர், கிளீனர், உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் பணியாளர்கள் உட்பட நான்கு பேரை மீட்டனர்.
அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in